Loading

1Across is delighted to present “Kattrathu Kathal”, our third Tamil cryptic crossword from Afterdark aka Shrikanth T.

It will be open for solving and submitting till 28th February. The solution grid and names of all those who got it correct will be published in our blog in March.

Hope you enjoy this special grid. Happy Solving.

Here’s the PDF version in case you prefer to print and solve instead.

Thanks to Hari Balakrishnan’s site for the software applet.

Solving Applet:

குறுக்காக:

1.ஒளி வடிவமாக நேரில் பார்த்தவனாகச் சொல்கிறேன் – சாலையோரத்தில் இல்லை, காட்டின் எல்லையில் தான் (5)
4.முதல் தங்கையின் காதல் சீக்கிரம் முடிந்தது கொஞ்சம் துன்பம் – அது ஒவ்வாதது (4)
8.வழி பின்பற்றினால் திங்கள் முதல் தேதி (3)
9.எப்படியாவது கொல் ரகு. காலில் சுடு என்று கருத்து தெரிவி (3,2)
10.வஞ்சனையில் வீழ்ந்த பாரி உடைந்து போனான் 50 சதவிகிதம் (4)
11.சனவரியில் முதலில் வரவேண்டியது இல்லை, கடைசித் தேதியிலிருந்து ஒழுங்காக ஒவ்வொரு நாளும் (4)
13.நேற்று ஆரம்பத்தில் கார் விபத்து; எல்லாப் பக்கமும் பணம் விரயம். இதில் கடைசியில் ஒரு பேட்டி (5)
16.யுக்தியாக ஒரு செய்தி, கம்பி மூலமாக; ரத்தத்தில் உடம்பில்லை (5)
17.கைப்பு, இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு,துவர்ப்பு, கார்ப்பு (4)
19.பரமக்குடி மண்ணுக்குள் மூன்றாவதாக ஒரு சந்ததித்தொடர் பொருள் (4)
21.தள்ளி நிற்காதே; ஒரு இனிப்பு பதார்த்தம் நடுவில் ஒரு கிலோ உள்ளே வை (4,1)
23.முதல் கணவன் ரவுடி, இதயமில்லாதவன், மிருகம் (3)
24.பால் ருசி மிகை, முதலில் என் பின்னால் நோக்கு (4)
25.ஏக்கமுடன் தினமும் பாதிக் கனவு, முடிவில் அவனுடன் பிரிவு, 60 சதவிகிதம் (5)
நெடுக்காக:

1.நெல்லையில் இருக்கும் கடவுள் தேசத்தந்தைக்கு அறிவூட்டினார் (5)
2.தாயின் தங்கை மோட்சம் (3)
3.காயில் ஒரு காயை வெட்டு (4)
5.காலமெல்லாம் தன்னை முதலில் வைத்தால் முடிவில் அன்பு (3)
6.கூறு, தோளில் போடுவது தானே? (3)
7.உள்ளே இருக்கும் பெரும்பகுதி நேரத்தில் கொஞ்சம் மட்டும் வேலை பார்த்தால் இதுவென்று சொல்வார்களோ (5)
10.முடிவில்லா வீழ்ச்சிக்கு ஒப்புக்கொடு (3)
12.மாலையில் பார் (3)
14.படித்து, ஒரு காலை உள்ளே ஊன்றி ஒரு பூதமாகு (3)
15.ஆந்திர விவசாயி கம்பம் ஓரத்தில், மேலே மழைத்துளி நீர் (5)
17.அழுத்தமாகச் சொல்வதென்றால் பெண்ணின் பெயர் மிகவும் சிறியது (2)
18.இரத்தின வியாபாரியை இரெண்டு முறை திட்டு, இதயமில்லா கள்வன் (5)
20.அது பால் குடுக்கும், கொஞ்சம் பழம், தினை எடுத்துக்கொண்டு வை – இறைவன் (4)
21.அந்தப்பக்கம் கடைசியில் மறைந்தது தகப்பனார் (3)
22.உயிர்கொல்லி மிருகம் பாதியில் திரும்பி, கிணற்றோரத்தில் பின்னால் சென்றது (3)
23.சொப்பனத்தில் கனவான், முதல் பாதி தினவின் முடிவில் (3)

By Sowmya

Sowmya is a Chartered Financial Analyst (CFA) and independent financial consultant based in the Middle East (Bahrain). She is a puzzle editor at Amuselabs. She has set over 1,300 crosswords for various publications including over 1000 mini crosswords, cryptic crosswords (under the pseudonym Hypatia for The Hindu) and themed crosswords for Cat.a.lyst (part of The Hindu Businessline). Sowmya runs the Facebook group 1Across where seasoned cruciverbalists interact while setting and solving clues. She has published three compilations of crosswords viz Cryptic Crossroads Volumes 1, 2 and 3. She Tweets cryptic clues daily @somsram

Leave a Reply